வனவிலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒளியுடன், ஒலி எழுப்பும் சோலார் சென்சார் கருவிகள் பொருத்தும் பணி தீவிரம்.!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது இந்நிலையில் இரவு நேரங்களில் காட்டுயானை,சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து அச்சுறுத்தி வருவதோடு குறிப்பாக காட்டுயானைகள் சிலசமயங்களில் மக்கள் குடியிருப்பு, ரேஷன் கடை, சத்துணவு கூடம் ஆகியவற்றை இடித்து சேதங்களையும் ஏற்படுத்தி வருவதையும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் நலன் கருதி வனவிலங்குகளின் நடமாட்டத்தை உடனே அறிந்து கொள்ளவும் உரிய பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 700 கருவிகளும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 600 கருவிகளும் ஆக மொத்தம் 1300 கருவிகள் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை கள இயக்குனர் ஆகியோர்களின் ஆலோசனைக்கு இணங்க வனத்துறை பணியாளர்களுடன் எஸ்டேட் தொழிலாளர்களும் இணைந்து இக்கருவிகள் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊசிமலை எஸ்டேட் மற்றும் அக்காமலை எஸ்டேட் பகுதிகளில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் நேரடிப் பார்வையில் பணியாளர்கள் இப்பணியை செய்து வருகின்றனர் இக்கருவி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரையிலும் சுமார் 30 மீட்டர் தூரம்வரை வனவிலங்குகள் அப்பகுதியில் நடனமாடினால் இந்த கருவி சென்சார் மூலம் கண்டறிந்து சோலார் மின் விளக்குடன் ஒலியெழுப்புவதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்றும் இக்கருவியை பொருத்துவதற்கு ஆணைபிறப்பித்த தமிழக அரசுக்கும் சிறப்பான பணி செய்துவரும் வனத்துறையினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்