திருச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்.!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார் முகாமில் ஆதார் அட்டை பெறுவதற்கு 18 விண்ணப்பங்களும் சமூக நலத்துறையின் மூலமாக வழங்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை வேண்டி 23 விண்ணப்பங்களும் மாவட்ட திறன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தொழில் முனையும் வகையில் பயிற்சி வேண்டி 22 விண்ணப்பங்களும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வேண்டி 43 விண்ணப்பங்களும் வேலை வாய்ப்பு வேண்டி 34 விண்ணப்பங்களும் மாவட்ட தொழில் மையத்திற்கு 17 விண்ணப்பங்களும் என மொத்தம் 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகள் தங்களுக்கு பட்டா வேண்டி மனு கொடுத்து இருக்கிறார்கள் அதையும் வருங்காலங்களை செய்து கொடுக்கிறோம் மேலும் தாங்கள் வசிப்பதற்கு இலவச வீடு கட்ட அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் இந்த விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கான சேவைகள் விரைவில் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார் முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மற்றும் திருநங்கைகளின் தலைவி மற்றும் திருநங்கைகள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.