சூலூர் காவல் துறை சார்பில் நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் நவீன் மன நல மருத்துவமனை, இணைந்து மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் திருஞானம் தலைமையில் மனநல மருத்துவர் ப்ரீத்திஷா மாணவர்களுக்கு போதை பொருள் பற்றிய சீர்கேடுகளை கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஒரு சில பிரச்சனைகள்சிறிது சிறிதாக பயன்படுத்தும் போதை வஸ்துக்கள் கடைசியில் நமது வாழ்க்கையை கெடுத்து விடும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் தெளிவாக தெரிவிக்கப்பட்டது. சூலூர்காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் அசோக்குமார் மாணவர்கள் ஒழுக்கமாக எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தார். காவலர் பாரதிராஜன் மாணவர்கள் மத்தியில் தலைமுடியை சரியாக வெட்டி வர வேண்டும் இறுக்கமான பேண்ட்டுகளை போடக்கூடாது கருப்பு மாஸ்க் அணியக்கூடாது போன்ற சீரகங்கள் எல்லாம் எடுத்துரைத்து அறிவுரை கூறினார் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஆசிரியர் கதிர்வேல் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்€