கோவை பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து – 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் உள்ள மஜீத் வீதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் ( வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் பூக்கடை மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகம்மது அனான்ஸ் .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டு பூக்கடையில் இருந்தார். சையது இப்றாஹீம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிக சத்தத்துடன் மோதுவது போல் வந்த 2 பேர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தனர். இதை பார்த்த சையது இப்ராஹீம் மனைவி பார்த்து வர வேண்டியதுதானே? என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதை சையது இப்ராஹிம் கண்டித்து உள்ளார். பின்னர் அவர்கள் பூக்கடைக்கு சென்றனர்.மாணவன் முகமது அனான்ஸ் வெளியே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு சூரியா (வயது 21) மணிகண்டன் ( வயது 23 )கவீன் என்ற கருப்பசாமி ( வயது 28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து முகமது அனான்சிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் திடீரென்று முகமது அனான்சின் தலையில் கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அவரது தந்தை செய்யது இப்ராஹிம், தாய் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா, மணிகண்டன் ,கவின் என்ற கருப்பசாமி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..