நீலகிரி உதகை ஸ்பென்சர் சாலை டாஸ்மார்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் நடைபாதை தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது இப்பகுதியில் தனியார் விடுதிகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடைபாதை பயன்படக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் இங்கு வாகனங்களை போக்குவரத்து விதிமுறைகளை அவமதித்து வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் நடப்பதால் விபத்துகள் நேரிடும்?
இங்கு டாஸ்மார்க் உணவு விடுதிகள் தங்கும் விடுதிகள் உள்ளதால் அதிக சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது, இவர்கள் தங்களது வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால், நடப்பாதையில் செல்ல வேண்டிய பள்ளி குழந்தைகள் வயது முதியவர்கள் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது, இதனால் அவழியாக வாகனங்கள் அதிக வேகத்தால் வருவதால் விபத்துக்கள் நேரிடும் என பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது, தற்போது உதகையில் சில பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை அமைதிக்கிறார்கள், மற்றும் சில இடங்களில் நோ பார்க்கிங் போர்டு அமைக்காததால் இது போன்றவர்கள் எங்கு வேண்டும் என்றால் வாகனங்களை நிறுத்திக் கொள்கிறார்கள் இவர்களிடம் இங்கு வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்று கூறினால் அவர்கள் கூறுவது இங்கு நோ பார்க்கிங் போர்ட் இல்லை என்று பதில் அளிக்கிறார்கள். இதனை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..