கோவை வடவள்ளி பக்கம் உள்ள கல்வீரம் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சரவணன் (வயது 28 ) புத்தக விநியோகஸ்தர். இவர் நேற்று தனது பைக்கில் வடவள்ளி – சிறுவாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது காரில்பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்தது. பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ 2 ஆயிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டது. இது குறித்து சரவணன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கமல் ,கிரி |ரமேஷ், ராஜா என்ற கோழி ராஜா ஆகியோரைதேடி வருகிறார்கள்.