உதகை காவல் நிலையம் சார்பில் பழங்குடியினர் கிராமத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வு..!

நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கெங்கரை, பாவியிர், மெட்டுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். நீலகிரி காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் இவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றிய ஆலோசனை செய்திகள் வழங்கப்பட்டு விழாவில் கலந்து கொண்ட பழங்குடியின மக்களுக்கு டார்ச் லைட் மற்றும் கம்பளி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகை தந்த பழங்குடியினர் மக்களுக்கு டார்ச் லைட் மற்றும் கம்பிலிகள் வழங்கினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குன்னூர் கோட்டாட்சியர் துணை காவல் கண்காணிப்பாளர்கள் , மற்றும் பழங்குடியின மக்கள் திருவிழாவுக்கு கலந்து கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு சிறப்பு முகாமில் பங்கேற்று ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்து சென்றனர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் சோலூர்மட்டம் காவல் நிலையத்தினர் செய்திருந்தனர் விழா நிகழ்ச்சியில் நிறைவாக நன்றி கூறி விழா நிறைவு பெற்றது..