மருதமலையில் காட்டு யானைகள் நடமாட்டம் – பக்தர்கள் பீதி.!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு .சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.தற்போது மருதமலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நலன் கருதி மாலை 6 மணிக்கு மேல் மருதமலைக்கு மலைப்பாதை வழியாக வாகனங்களும் பக்தர்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. நேற்று கோவிலை ஒட்டியுள்ள மலைப் பாதையில் 7 யானைகள் ரோட்டை கடந்து வனத்துக்குள் சென்றது.. இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்கு துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.யானைகள் நடமாட்டம் பக்தர்கள் மத்தியில் பெரும் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது..