சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சூலூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர், நடிகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை பொருளாளர் நடராஜன் வரவேற்புரை ஆற்றிட அறக்கட்டளை இணைத்தலைவர் செ.ம. வேலுச்சாமி முன்னிலையில் சிறப்பு விருந்தினராக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி கலந்து கொண்டனர். கீர்த்தி பம்ப்ஸ் கந்தசாமி, சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க விழா பேருரையாக புலவர் செந்தலை கௌதமன் பள்ளியில் வரலாற்றை எடுத்துக் கூறி பள்ளி அடுத்த ஆண்டு நூற்றாண்டினை துவங்குகின்ற நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய நலத்திட்டங்களையும் சலுகைகளையும் சிறப்பாக பயன்படுத்தி மாணவர்கள் ஒழுக்கத்தோடும் சிறப்புடன் கல்வி பயின்று பள்ளியின் சிறப்பினையும் ஊரின் பெருமையும் அனைவரும் போற்றும்படி வாழ்வில் முன்னர வேண்டும் என எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை அறங்காவலர்கள் த.மன்னவன், ஆசிரியர் ராஜாமணி, ஸ்டான்லி பீட்டர், குமரேசன், பொறியாளர் காளிமுத்து, தனபால், சுப்ரமணியம், மின் பொறியாளர் பன்னீர்செல்வம் , சோமசுந்தரம், பசுமை நிழல் விஜயகுமார், தமிழ்ச்செல்வி டிரஸ்ட்தர்மராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு வகைகளில் பள்ளியில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நன்கொடையாளர்களை விழாவில் சிறப்பிக்கப்பட்டது .தொடர்ந்து கல்வியில் முதன்மை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு பள்ளிகளில் இருந்து வருகை தந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசீலி நன்றி தெரிவித்தார்..