கோவை: திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி ( வயது 52) இவர் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தாராபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.டிக்கெட் எடுத்து விட்டு மீதி பணத்தை கண்டக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது 5ரூபாய் நாணயம் ஒன்று கீழே விழுந்தது .இதை அவர் குனிந்து எடுத்தார். அப்போது அவரது பையில இருந்த 30 பவுன் நகைகள் பணம் ரூ. 80 ஆயிரம் ஆகியவற்றை அருகில் நின்ற யாரோ நைசாக திருடி விட்டனர் .பையை திறந்து பார்த்தபோது நகை பணம் இல்லாத கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் மலர்விழி புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.