9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்ற வெள்ளையன் ( வயது 54) கூலி தொழிலாளி இவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளிக்கூட ஆசிரியையிடம் கூறியுள்ளாள். பள்ளி ஆசிரியை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் தொழிலாளி செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..