பூந்தமல்லியை அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை பகுதியில் குட்கா மினி லாரி மூலம் கடத்தி வரப்படுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நசரத்பேட்டை போலீசார் திடீர் தீவிர வாகன சோதனையில் பரபரப்பாக ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த tn74/ ar4465 என்ற பதிவு கொண்ட பொலிரோ மேக்ஸி ட்ரக் வாகனத்தை மடக்கி தீவிரமாக சோதனை போட்டதில் 6 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்தனர் .அவற்றை பறிமுதல் செய்தனர் இவற்றைக் கடத்தி வந்த திருச்செந்தூரை சேர்ந்த லிங்கதுரை வயது 21 தகப்பனார் பெயர் கனகராஜ் என்பவனை கைது செய்து விசாரணை செய்ததில் இக் குட்கா கடத்தலில் அவனுக்கு மூளையாக செயல்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழரசன் வயது 21 தகப்பனார் பெயர் சந்திரசேகர் மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராஜலிங்கம் வயது 25 தகப்பனார் பெயர் பெரியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து அவர்களிடமிருந்து 1300 கிலோ குட்கா பொருட்கள் உமா பார்க்கிங் அருகில் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளிகள் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு விற்பனைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது . மேலும் இந்த சம்பவத்தில் 1500 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குற்றவாளிகள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயில் அடைக்கப்பட்டனர்..