ஆவடி சிஆர்பிஎப் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது..!

ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை துப்புரவு பணியாளர்களாக தேர்ச்சிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் 300 நபர்கள் கலந்து கொண்டனர். அந்த உடற் தகுதி தேர்வில் கலந்து கொண்ட கரன்சிங்ராத்தூர் வயது 21 தகப்பனார் பெயர் ராத்தூர் என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவன் தற்போது திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியில் வசித்து வருகிறான். இவன் மேர்படித் தேர்வில் கலந்து கொண்டான். அவனது அடையாள அட்டையில் உள்ள புகைப்படமும் இதற்கு முன்னர் நடைபெற்ற எழுத்து தேர்வில் கலந்து கொண்ட புகைப்படமும் ஒத்து போகவில்லை என்பதால் இவனது புகைப்படமும் கைரேகையும் ஒத்துப் போகவில்லை இரண்டையும் டி சி எஸ் நிறுவன மூலம் சோதனை செய்த போது அதிலும் ஒத்து போகவில்லை என்பதால் கரன்சிங் ராத்தோ ர் என்பவனை விசாரணை செய்த போது தனக்கு பதிலாக வேறு ஒரு ஃப்ராடை போலியாக எழுத்து தேர்வு எழுத அனுப்பியதாகவும் எழுத குற்றத்தை ஒப்புக்கொண்டான். இது தொடர்பாக மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து கரன்சிங் ராத்தோர் என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..