சூலூர் அருகே பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி..

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி குடிப்பில் வசிப்பவர் சங்கர் கணேஷ் (வயது 48)கூலி தொழிலாளி இவரதுமனைவி ஜோதிமணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் .சங்கர் கணேஷ் மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார் நேற்று முன் தினம் இரவு சங்கர் கணேஷ் மனைவி | மகள்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தன அதிகாரி 2:30 மணி அளவில் பலத்த மழை பெய்து . அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்டு சங்கர் கணேஷ் வெளியேவந்து பார்த்தார். ஏற்கனவே பெய்த மழையால் ஈரமாக இருந்த வீட்டில் ஒரு பக்க சுவர்திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கி புதைந்த சங்கர் கணேஷ் அதே இடத்தில் இறந்தார். இது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மாணவி ஜோதிமணி மற்றும் குழந்தைகளுக்கு தெரியவில்லை. காலை 5 மணிக்கு மேல் அக்கம் பக்கம் வந்து பார்த்தபோது வீட்டின் சுவர் இடிந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் வீட்டில் இருந்த ஜோதிமணி குழந்தைகளை வெளியே அழைத்தனர். அப்போது வீட்டின் சுவர் இடிந்து கிடப்பதை பார்த்து ஜோதிமணி மற்றும் குழந்தைகளை அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சங்கர் கணேஷ் எங்கே சென்றார் ? என்றுதேடி பார்த்தனர் .அவர் கிடைக்கவில்லை இதையடுத்து இடிந்து கிடந்த வீட்டின் சுவர் இடுப்பாட்டுக்குள் சங்கர்கணேஷ் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குழந்தைகள் மனைவி கதறிஅழுத காட்சி பரிதாபமாக இருந்தது .இதுகுறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்தமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.