கோவை போத்தனூர் மெயின் ரோட்டில் உள்ள ஜாம் – ஜாம் நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் ( வயது 46) உலர் பழவியாபாரி .இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 2 லட்சத்து 35 ஆயிரம் பணம், 3 கைக்கடிகாரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து முகமது இஸ்மாயில் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதேபோல கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மீனா எஸ்டேட் எல்ஜி நகரை சேர்ந்தவர் அரிஹரசுப்பிரமணியன் ( வயது 29) வியாபாரி இவர் 20 -ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் . இது குறித்து அரிஹரசுப்பிரமணியன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..