மனைவியை நிர்வாண படம் எடுத்து கொலை மிரட்டல் – கணவர், மாமனார், மாமியார் மீது புகார்.!!

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி ,ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் ராதிகா (வயது 29) பெங்களூரூவில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் டினோ லினிகர் (வயது 29)என்பவருக்கும் 27- 12 – 23 அன்று திருமணம் நடந்தது.திருமணத்தின் போது நகை , பணம் வரதட்சணையாக கொடுத்தனர் . இந்த நகைகளை கணவரின் பெற்றோர் போலி நகைகள் என்று கூறி குற்றம் சாட்டினார்களாம். இது தொடர்பாக கணவரிடம் கூறிய போது அவர் அது பற்றி எதுவும் பெற்றோரிடம் கேட்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பெங்களூரூவில் வேலை பார்த்து வந்தனர். அப்போது தனது மனைவியை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்தாராம் . அதை அவரது மனைவி அழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாராம் . இது குறித்து ராதிகா சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கணவர் டினோலினிகர் ( வயது 29 )அவரது தந்தை ராபர்ட் வில்சன், தாயார் லியோனாமேரி ஆகியோர் மீது மானபங்கம் வரதட்சனை கொடுமை உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..