ஆடிப்பெருக்கு விழா… .மருதமலை மலைப்பாதையில் நாளை கார்கள் செல்ல தடை.!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது..நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஆடிப்பெருக்கு திருவிழா நாளை ( சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது .இந்த நாட்களில் மலைப்பாதையில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 சக்கர வாகனங்களிலும், மலைபடிகள் வழியாகவும், கோவில் தேவஸ்தான பஸ்களிலும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் .பக்தர்களின் கூட்டம் நெரிசலை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர் , மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகிறார்கள்.

இதே போல கோவை காந்தி பார்க், சுக்கிரவார்பேட்டை பகுதியிலுள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவம் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்..