கோவை நேரு ஸ்டேடியத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு.!!

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. அக்னி வீர்ஜெனரல் டியூட்டி ,அக்னி வீர் டெக்னிக்கல், அக்கினி வீர் அலுவலக உதவியாளர் ,ஸ்ட்ரோ ர கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10 -வது வகுப்பு தேர்ச்சி அல்லது 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது  .வருகிற 5 – ந் தேதி வரை நடைபெறும். இந்த முகாமில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், , தேனி திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான அனுமதிச் சிட்டினை பதிவு செய்து முன்பே பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர். ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு வந்தவர்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முழு ஆவணங்கள் இல்லாதவர்கள் முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர் .முதல் நாள் முகாமில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சான்றிதழ் உடன் வந்து இருந்தனர். தேர்ச்சி பெற அல்லது பதிவு செய்ய உதவுகிறோம் எனக் கூறி மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 5-ந்தேதி வரை நடைபெறும் . இந்த முகாமில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..