வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகையை கொள்ளையடித்த கேடி கைது..!

மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விமலா புரத்தைச் சேர்ந்த நாராயணன் வயது 43. தகப்பனார் பெயர் ஜெகநாதன் என்பவர்  குடும்பத்தாருடன் பெங்களூரு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டு நாராயணன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளை போன வீட்டின் தடயங்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமராவின் பதிவின் அடிப்படையில் கொள்ளையன் ராஜி என்கிற மஸ்தான் வயது 24. தகப்பனார் பெயர் மணி. புது வண்ணாரப்பேட்டை சென்னை. என்பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையன் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட  25 சவரன் தங்க நகைகள் போலிசார் மீட்டனர். கொள்ளையன் ராஜி என்கிற மஸ்தான் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜி என்கிற மஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்..