திருச்சியில் சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி- ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் தொடங்கி வைத்தார்..!

திருச்சியில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தேசிய கல்லூரியின் உள்விளையாட்டாரங்கத்தில் நேற்று நடைபெற்றது.சிலம்பம் உலக சம்மேலனத்தின் சார்பில் நடந்த இந்த போட்டிகளில் இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை கத்தார் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியை திருச்சி மாவட்ட ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தேசியக் கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி சிலம்பம் உலக சம்மேலனத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினர். நிகழ்வில் ஒற்றைக்கம்பு வீச்சு இரட்டை கம்பு வீச்சு வால் வீச்சு சிலம்ப சண்டை அலங்கார வரிசை மான் கொம்பு வேல் கம்பு சுருள்வால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் சிலம்பம் உலக செம்மேலனத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடம் பெற்றது. சிலம்பம் உலக சம்மேலனத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சங்கர் இது குறித்து கூறுகையில் நமது பாரம்பரிய கலையான சிலம்ப கலையை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும் சிலம்பத்தை தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த சிலம்ப போட்டியில் மாணவ மாணவிகள் சிறுவர் சிறுமிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்