கோவை மாவட்ட எஸ்.பி.யாக டாக்டர் கார்த்திகேயன் நியமனம்.!!

கோவை:கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் பத்ரி நாராயணன்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
.இவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் டாக்டர் .கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சுந்தர வடிவேலு இடம்மாற்றம் செய்யப்பட்டு சென்னை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 24 ஐ. பி. எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது..