கோவை சுகுணாபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18) இவர் குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார் .அப்போது உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்த் வீரா (வயது 28 )என்பவர் தனலட்சுமி உடலின் பின் பகுதியை தட்டி மானபங்கம் செய்தாராம். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த வீரா மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம் – வாலிபர் மீது வழக்குபதிவு..!
