கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையத்தில் சி.ஆர் .பி .எப். பயிற்சி கல்லூரி உள்ளது. இங்குள்ள சந்தன மரங்களை ஒரு கும்பல் அடிக்கடி திருடி வந்ததாக புகார் வந்தது . இதையடுத்து சி.ஆர். பி.எப். முகாம் அதிகாரி ராஜேஷ் குமார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சிஆர்பிஎப் பவுண்டரி வளாகத்துக்குள் புகுந்து சந்தன மரம் திருடிக் கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்தார் . அவர்களை துடியலூர் போலீசில் ஒப்படைத்தார். சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் அந்த கும்பலை கைது செய்தார். விசாரணையில் அவர்கள் சேலம் வாழப்பாடி ,ஆலடி பட்டி பக்கம் உள்ள பக்கம் உள்ள போலபாடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ( வயது 35 ) மதி (வயது 38) கந்தசாமி (வயது 47) வெங்கட்ராமன் ( வயது 35 ) மாரப்பன் ( வயது 40) சுப்பிரமணி ( வயது 39) குமார் (வயது 41) சதாசிவம் (வயது 39) வரதராஜ் (வயது 41) என்பது தெரிய வந்தது . 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களிடமிருந்து 2 கத்தி, மரம் அறுக்கும் ரம்பம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்..