கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் ஆகிய ஆலயங்களில் ஆடி வெள்ளிக்கிழமையின் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்து அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதங்களுடன் அன்னதானம் வழங்கப்பட்டது..