கோவை மாவட்டம் காரமடை -கரியாம்பாளையம் ரோட்டில் உள்ள சென்னி வீரம்பாளையம் பகுதியில் வேகமாகச் சென்ற கார் திடீரென்று நிலை தடுமாறி மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த பிரஸ் காலனி வள்ளலார் நகரை சேர்ந்த செல்வபாய் ( வயது 72) ஜெய் ஸ்ரீ நகர் சுகந்திகா ( வயது 24) மனோன்மணி ( வயது 66) பிளிசி (வயது 36)சுசிலா ( வயது 70)ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் . வழியில் மூதாட்டி செல்வபாய் இறந்தார் . மேலும் 4 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது தொடர்பாக காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கார் ஓட்டி வந்த டிரைவர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
கார் மரத்தில் மோதி முதாட்டி பரிதாப பலி – 4 பெண்கள் படுகாயம்..
