தமிழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடின்றி பாமாயில் தரப்படுகிறது என கூறினார். மேலும் ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Leave a Reply