கோவை துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆயுதப் பயிற்சி, கலவர தடுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு 45 நாட்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மத்திய ஆயுதப்படை போலீசார் 300 பேர், சுமார் 15 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து வனப்பகுதிகளில் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு காடுகளில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்வது எப்படி? காடுகள் வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகள் நக்சலேட்டுகளை கண்காணித்து பிடிப்பது எப்படி? என்பது குறித்தும் மனித நடமாட்டம் விலங்குகள் நடமாட்டம் பற்றி வனப்பகுதிக்குள் அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கபபட்டு வருகிறது. 7 நாட்கள் காடுகளில் வாழ இவர்களுக்கு அடிப்படை தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவரும் காடுகளுக்குள் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். தலைமை உதவி ஆணையர் கமாண்டர் அனாஸ் தலைமையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply