ணலி ஜலகண்டாபுரம் தாஹிர் உசேன் பகுதியில் இரவு ரோந்து பணியில் தலைமை காவலர் அரங்கநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம ஆசாமி முள் செடி அருகே படுத்துக் கொண்டானாம். அவனை போலீசார் பிடித்து சோதனை செய்த போது அவனிடம் 5 செல்போன்கள் இருந்ததை கண்டு கைப்பற்றினர். அவனை மணலி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் முத்துராஜ வயது 20. தகப்பனார் பெயர் தர்மர் சிவபாதம் தெரு பெரிய சேக்காடு மணலி. இவன் ஜலகண்டபுரம் தாஹிர் உசேன் தெரு வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் 5 செல்போன்களை திருடியதாக ஒப்புக் கொண்டான். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளி முத்துராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறையில் அடைக்கப்பட்டான்.
மணலியில் செல்போன் திருடன் கைது..!
![](https://www.newsexpresstamil.com/wp-content/uploads/2024/08/e2d0f0f4-c193-46d8-a6e1-ce76be704bd3.jpg)