கோவை புது சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசல்யா ( வயது 23) இவர் சுகாதாரத் துறையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனுசல்யா சுபாஷ் என்பவரு டன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது .இதை கண்டித்தனர் .இந்த நிலையில் அனுசல்யா நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது தாயார் அமுதா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கள்ளக்காதலை கண்டித்ததால்… மருத்துவ பெண் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை..
