தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு தடை..!

ர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் ஆண்டு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமாகவும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பொதுவாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா படகு இல்லம், தொட்டபெட்டா உட்பட்ட இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வர திட்டமிட்டு சுற்றுலா செல்வார்கள். ஆனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு செல்லும்போது வாகன கட்டணம் வசூலிக்க காத்திருத்தல் போன்ற காரணங்களால் திட்டமிட்டபடி அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அவர்களால் போக முடிவது இல்லை. இதனால், கூடுதலாக ஊட்டியில் ஒரு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரம் காத்திருக்கும் போது வாகனங்களுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனை சாவடியில் ‘பாஸ்ட் டேக்’ மின்னனு பரிவர்த்தனையை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் இறுதி கட்டப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை வரை தொட்டபெட்டா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டது இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்ட்டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. எனவே, நாளை (இன்று) முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றனர்.