போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க பெங்களூரில் 3 நாட்கள் மனநிறைவு பயிற்சி.!!

சென்னை : தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
தமிழக காவல்துறையில் பணிபுரியும் போலீசருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக பெங்களூரில் இயங்கி வரும் nimhans உடன் இணைந்து 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி அனைத்து மாவட்டம் மாநகரம் சிறப்பு காவல் படை மற்றும் அனைத்து சிறப்பு பிரிவில் சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் போலீசாருக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக மன அழுத்த மேலாண்மை மற்றும் நிறை வாழ்வு பயிற்சி பெற்ற 115 காவலர்கள் 131 பிரைவேட் கவுன்சிலரஸ் ஆக மொத்தம் 246 பேர் உளவியல் நல வாழ்வு தொடர்பான பட்டயப் படிப்பு படிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இப்பயிற்சியில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 46 போலீசார் கலந்து கொண்டு பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றனர். மூன்றாம் கட்டமாக 20.8.2024 அன்று 69 போலீசாருக்கு ஆறு மாத பட்டயப் படிப்பு வழங்குவது தொடர்பாக துவக்க விழா நிகழ்ச்சி காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவல்துறையின் தலைமை இயக்குனர் / படைத்தலைவர் சங்கர் ஜீவால் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் தலைமையிடம் பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குனர் நலன் வினித் தேவ் வான்கேடே துணைத் தலைவர் நலன் டாக்டர் எம். துரை காவல்துறை உதவி தலைவர் நலன் பி. பாலாஜி உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் nimhans நிறுவன கூடுதல் பேராசிரியர் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. ஜெயக்குமார் மற்றும் உளவியல் மருத்துவர் டாக்டர்சி. ராமசுப்பிரமணியம் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..