ஆசிரியையை ஏமாற்றி 2 -வது திருமணம் செய்து ரூ.11 லட்சம் மோசடி- டிராவல்ஸ் மேனேஜருக்கு போலீஸ் வலைவீச்சு.!!

கோவை கரும்புக்கடை ,இலாகி நகரை சேர்ந்தவர் முகமது பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 33) அரேபிக் ஆசிரியை. இவரை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 55) என்பவர் டிராவல்ஸ் அதிபர் என்று கூறியும், தனது முதல் திருமணத்தை மறைத்தும் திருமணம் செய்து கொண்டார். இவர் 7 – 5 – 2017 முதல் 6. 7 -2024 வரை அப்துல்லாவிடம் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் கத்தார் செல்வதாக கூறி பல்வேறு தவணைகளில் மனைவியிடம் ரூ 11 லட்சம் வாங்கியிருந்தார். கத்தாருக்கு செல்லவில்லை. அவர் டிராவல்ஸ் நடத்தவில்லை என்றும், டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது .தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சர்மிளா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்துல்லா மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..