இரு வேறு சமூகங்கள் இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை – தர்மபுரி காவல்துறை அறிவிப்பு.!!

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ் மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடி காணாமல் போனது தொடர்பாக பெண் வீட்டார் மேற்படி இளைஞர் வீட்டிற்கு சென்று இளைஞர்களின் பெற்றோர்களை அடித்து வீட்டை சேதப்படுத்தியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டிதாகவும் இளைஞரின் தாயாரை கடத்தியதாகவும் அவரின் வாயில் கட்டாயப்படுத்தி ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவும் இரவு முழுவதும் பாலியல் தொல்லை கொடுத்துதாகவும் கூறப்பட்டது. செல்வம் தகப்பனார் நஞ்சன் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அரூர் டி எஸ் பி அவர்களை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்படி வழக்கை விசாரணைக்கு ஏற்ற டிஎஸ்பி புகாரில் கூறப்பட்ட இளைஞரின் தாயாரை அன்று இரவே பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சையின் போது தனக்கு ஆல்கஹால் வாயில் ஊற்றப்பட்டதாகவோ பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாகவோ மருத்துவரிடம் தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் புலன் விசாரணை அதிகாரி யிடமும் அவ்வாறு கூறவில்லை. மேலும் தங்களுடைய வீட்டை பெண்ணின் வீட்டார் சேதப்படுத்தியதாகும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. ஆனால் தன்னுடைய ஜாதி பெயரை சொல்லி திட்டிய விவரத்தை மட்டும் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். அவரின் வாக்கு மூலத்தின் படி இதுவரை 3 குற்றவாளிகள் பெண்ணின் தந்தை தாயார் மற்றும் உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டுள்ளனர்.  தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 20.8.2024 அன்று வழக்கின் விசாரணை அதிகாரி கேட்டுக் கொண்டதன் படி பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டப்பிரிவு 183 ன் கீழ் அரூர் குற்றவியல் நடுவர் அவர்கள் பாதிக்கபட்ட நபர்களான செல்வம் மற்றும் முருகம்மாள் ஆகியோரை 21.8.2024 அன்று நேரடியாக விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும் அரசால் வழங்கப்படும் தீர்வு உதவி தொகை கோரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையின் புலன் விசாரணை முழு விவரம் அறியாமல் மேற்படி சம்பவத்தை உண்மைக்கும் வழக்கிற்கும் இருவேறு சமூகத்திற்கு இடையே நிலவும் நல்லுறவிற்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இம்மாதிரியான ஆதாரமற்ற தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.