பெட்டிக்கடையில் 30 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று வெள்ளலூர் புற்றுகண் பாலம்பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை விற்பனை செய்து வந்த வெள்ளலூர் ரமேஷ் ( வயது 50) குனியமுத்தூர்,செல்வம் நகர் அசாருதீன் ( வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொபட், கார் மற்றும் புகையிலை பொருட்கள் மீட்கப்பட்டது..