பரோலில் வந்த கொலையாளி மதுபான கடை சுவற்றில் ஓட்டை போட்டு 107 பெட்டி மது பாட்டில்களை திருடிய 15 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எண் 4544 ல் கடந்த 1.03.2024 ஆம் தேதி நள்ளிரவு சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே இருந்த ரூபாய் 8 லட்சத்து 62ஆயிரத்து 930 மதிப்புள்ள 107 அட்டைப் பெட்டிகளின் உள் இருந்த மது பாட்டில்களை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் தயாளன் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் கேடிகள் சுபாஷ் விக்னேஷ் என்பவர்களையும் 13.3.2024 ஆம் தேதி கார்த்தி என்பவனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் இவ்வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட கொலை கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சட்ரஸ் காவல் நிலைய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் ஆயுள் சிறை கைதியாக இருந்த நிலையில் 2009ம் வருடம் மூன்று நாட்கள் பரோல் விடுப்பில் வந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் சுமார் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்து கொண்டு வந்தவாசி மேல்மருவத்தூர் மதுராந்தகம் பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் சுவற்றில் ஓட்டை போட்டு மது பானங்களை கொள்ளை அடித்த வழக்குகளில் தலை மறைவாக இருந்த கொள்ளையன் மோகன் குமார் வயது 44.தகப்பனார்சிவஞானம்.ஏஜி சர்ச் தெரு கடுகுப் பட்டு கிராமம். பாலூர் போஸ்ட் செய்யூர் தாலுக்கா.செங்கல்பட்டுமாவட்டம்.என்பவனை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே. சண்முகம் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் போலீஸ் துணை சூப்பிரண்ட் சங்கர் கணேஷ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். பிரபாகர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சுதாகர் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செங்கல்பட்டு மாவட்டம் கடுகுப் பட்டி கிராமத்தில் தலை மறைவாக இருந்த கொள்ளையன் மோகன் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான்.வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். இவ்வழக்கில் தலை மறைவு எதிரியும் ஆயுள் தண்டனை பெற்று 2009 ம் ஆண்டு பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறைக்குச் செல்லாமல் 15 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த மோகன் குமாரை கைது செய்த தனி படையினரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஏய் சண்முகம் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.