குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்வதாக ரூ.88 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்தவர் கைது..!

ஆவடி : சமீப காலமாக ஆவடி மற்றும் தாம்பரம் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து வருகிறது. தமிழர்கள் ஏமாந்த இளித்த வாயர்கள் என்றான் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை என்னுடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதை உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். இதை உங்களது பெயருக்கு மாற்றித் தருகிறேன் என ஏமாற்றும் ஒரு கும்பல்.திரிந்து வருகிறது.

சென்னை ராமாபுரம் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் நாராயணசாமியின் மகன் கௌதமன் வயது 35. ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸ் பிரிவில் செயல்படும் போலி ஆவண  தடுப்பு பிரிவில் கொடுத்த புகார் மனுவில் சென்னை ராமாபுரம் நாயுடு தெருவை சேர்ந்த வேணுகோபால் மகன் சுப்பிரமணி குமணன் சாவடியை சேர்ந்த செல்வம் அம்பத்தூரைச் சேர்ந்த நித்தியா மணலி புதுநகரை சேர்ந்த லட்சுமி மற்றும் பயங்கர பிராடு பொன் சிங்கம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சென்னை படப்பை அருகே பனப்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகளை வாங்கித் தருவதாகவும் அதற்காக அரசாங்கத்திற்கு முன் பணமாக ரூபாய் 85 ஆயிரம் செலுத்த வேண்டும்.என்றும் கௌதமணியிடம் மற்றும் 104 பேரிடம் கூறியதால் தலா 85 ஆயிரம் ரூபாய் வீதம் ரூபாய் 88 லட்சத்தி 40 ஆயிரம் மொத்தமாக வாங்கிக்கொண்டு கௌதமனையும் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் போட்டோ மற்றும் கைரேகை கண் விழி அடையாளங்களை எடுத்துக் கொண்டு வேனில் ஏற்றி குடிசை மாற்று வாரிய வீடுகளை காட்டி இது உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். அரசு முத்திரையுடன் கூடிய போலி ஒப்புதல் சீட்டையும் கொடுத்து ஏமாற்றி உள்ளனர். 2013 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் பணி புரிவதாக ஏமாற்றிய பொன்சிங்கம் என்பவனிடம் மணலி புதுநகர் ஜெபஸ்டின் மனைவி லட்சுமி வீட்டு வேலை செய்து வந்ததாகவும் அதற்காக மாதம் ரூபாய் 10,000 வீதம் 2013 முதல் 2018 வரை வேலை செய்ததாகவும் கூறியுள்ளார். பொன் சிங்கமும் தனக்கு அதிக உதவிகளை செய்துள்ளாராம். அவன் தன்னிடத்தில் சென்னை முழுவதும் ஹவுசிங் போர்டு வீடுகளை கட்டித் தருகிறார்கள் . அதை வைத்து நாமும் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என பொன்சிங்கம் ஆசை வார்த்தை கூறினான்.  மேலும் தலைமைச் செயலகத்தில் தனக்கு அதிக ஆட்கள் உள்ளனர்.அவர்களை வைத்து நாம் தப்பித்து விடலாம் என யோசனை கூறியுள்ளான்.2018 ஆம் ஆண்டு அயப்பாக்கத்தில் உள்ள ஐ சி எஃப் காலனியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 350 பேரிடம் ரூபாய் 38 லட்சத்தை ஏமாற்றியுள்ளான்.2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டையில் 60 பேரிடம் ரூபாய் 24 லட்சம் வாங்கிக்கொண்டு பொன் சிங்கம் ஏமாற்றி உள்ளான். இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொண்டதால் போலீஸ் கமிஷனர் சங்கர் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலி ஆவண தடுப்பு பிரிவு ஆல்பி ன் பிரீஜிட் மேரி விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி தங்கவேலுவின் மகன் பொன் சிங்கம் வயது 61 என்பவனை சென்னை கூடுவாஞ்சேரியில் வைத்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..