விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3000 போலீசார் குவிப்பு..!

ஆவடி அம்பத்தூர் எண்ணுர் மீஞ்சூர் பூந்தமல்லி பகுதிகளில் பலத்த 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் 15 ஆம் தேதி விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நாளை 7 ஆம் தேதி செப்டம்பர் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை அரசு ஆணை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழி காட்டுதல்கள் படி அன்றைய தினம் பிரதிஷ்டை செய்து வழிபாட்டு விநாயகர் சிலைகளை 15.9.2024 தேதி அன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.இந்த விழா ஆவடி அம்பத்தூர் பூந்தமல்லி கொரட்டூர் எண்ணூர் பொன்னேரி மீஞ்சூர் வெள்ளவேடு திருநின்றவூர் போரூர் மாங்காடு ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு அமைதியாக செல்ல உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆவடி மாநகர காவல் துறை ஆணையாளர் கி. சங்கர் தலைமையில்நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா சுமுகமாக நடைபெற செயல்படுத்திட வழிபாட்டுத் தலங்கள் சிலை ஊர்வலமாக செல்லும் வழித்தடங்கள் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் காவல் கூடுதல் ஆணையாளர் அவர்கள் உட்பட 5 துணை ஆணையாளர்கள் 2 கூடுதல் துணை ஆணையாளர்கள் 16 காவல் உதவி ஆணையாளர்கள் 76 காவல் ஆய்வாளர்கள் 250 காவல் உதவி ஆய்வாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.