விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை, புளியகுளத்தில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு,பதினெட்டு வித திரவிய அபிஷேகம் செய்து, மணக்கும் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலையிலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். அறநிலை துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கனகராஜ் முன்னிலையில் பெரிய பட்டர் கார்த்திகேயன் பூஜைகள் தீபாராதனைகள் காட்டியும், பிரசாதம் வழங்கி வருகிறார்கள்..