கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 1500 விநாயகர் சிலைகள் கரைப்பு.!!

நாடு முழுவதும் கடந்த 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் 708 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 1528 சிலைகளும், என மாவட்ட முழுவதும் மொத்தம் 2,236 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயக சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். பொதுவாக விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 2 அல்லது 3 நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று குளம், குட்டைகளில் கரைப்பது வழக்கம். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடுநடத்தினர். பொதுவாக விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை பாரம்பரிய வழக்கப்படி 2 அல்லது 3 நாட்கள் கழித்து நீர் நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.. கோவையில் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க நேற்று 9 -ந் தேதி மற்றும் நாளை11-ந் தேதிகளில் அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று பாரத் சேனா, அனுமன் சேனா உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகள் வாகனங்களில் பாதுகாப்பாக ,ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து அந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக மாநகரில் குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளம், வெள்ளலூர் குளம், உள்ளிட்ட 14 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மீன்பிடி தொழிலாளர்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அப்போது பொதுமக்கள் யாரும் நீர் நிலைகளில் இறங்காதவாறு குளத்தை சுற்றிலும் போலீசார் தடுப்பு வைத்திருந்தனர். அத்துடன் அனைத்து குளங்களிலும் தீயணைப்பு வீரர்கள் படகுகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .ஊர்வலம் தொடங்கும் இடத்திலிருந்து குளங்களுக்கு கொண்டு செல்லும் இடம் வரை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கும் சிலைகள் கொண்டு வரும் இந்து அமைப்பினருக்கு பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினர். கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கோவையில் 1, 500 சிலைகள் நேற்று மட்டும் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ( புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட உள்ளது.