பள்ளி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்… கூடுதல் விடுமுறை அறிவிப்பு.!!

டப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடபட்டுள்ளது…

பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நாட்களை 210 ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது

வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு.

இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும். மேலும் மாணவர்களுக்கும் கூடுதல் விடுமுறையும் கிடைத்துள்ளது.