லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது..!

திருவள்ளுவர் : சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மின்வாரிய அதிகாரிகள் லஞ்ச பணத்தில் திளைத்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் செயல்படும் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளராக செயல்படுபவன் கஜேந்திரன் வயது 48. இவனது சொந்த ஊர் திருத்தணி. இவன் ஏற்கனவே திருத்தணி பகுதியில் லஞ்சம் ஒன்றை குறிக்கோளாக செயல்பட்டு வந்தான். இதையொட்டி அவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். சமீபத்தில் தான் மணவாளனருக்கு மாறுதலாகி வந்தான். இந்நிலையில் சடகோபனின் மகன் மதுக்கர் என்பவர் கார் வாஷிங் சென்டர் நடத்தி வந்தார். அதில் ஒரு முனை இணைப்பு இருந்தது. அதை மாற்றி மும்முனை இணைப்பு வேண்டுமென உதவி பொறியாளர் கஜேந்திரனிடம் கெஞ்சினார். அவனோ மதுக்கர் விஷயம் தெரியாதா மும்முனை இணைப்பு வேண்டுமென்றால் ரூபாய் 2 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மும்முனை இணைப்பு கொடுக்க முடியாது என திமிராக பேசினான். இதனால் மனம் உடைந்த மதுக்கர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி இடம் புகார் செய்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டது. இதை வாங்கிய கஜேந்திரன் ரூபாய் நோட்டுக்களை எண்ணிய போது மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் தமிழரசி பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தார். இதைப் பார்த்த கஜேந்திரன் தமிழரசியிடம் நான் வாங்கிய பணத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். என்னை மட்டும் விட்டு விடுங்கள் என கெஞ்சினான். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கஜேந்திரனை கைது செய்தனர். திருவள்ளூர் கிளை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைத்தனர்.