சர்வதேச அளவிலான பாதிப்புகள் … பொருளாதாரத்தை சாமர்த்தியமாக சமாளிக்கும் இந்தியா..!

க்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்த இரு நாடுகளிலும் போர் நடந்து வருவதால், சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல பாதிப்புகள் எற்பட்டுள்ளன.குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், யூரிய உள்ளிட்டவை இந்த நாடுகளில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதால், உலக நாடுகளில் அவற்றின் தேவை அதிகரித்து, விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பொருளாதார நிலைத்தன்மையுடன் உள்ளது. இதனால் விலையேற்றமும், நிலையில்லாத்தன்மையும் மக்களை பாதித்துவிடாத அளவுக்கு இந்த கடினமான சூழ்நிலையிலும் அரசு சமாளித்து வருகிறது.

சர்வதேச அளவில் வணிக ரீதியில் இக்கட்டான இந்த சூழ்நிலைகளை இந்தியா எவ்வாறு சமாளித்து வருகிறது என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

சர்வதேச சந்தைகளில் இருந்தே இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் உலக நாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்கக்கூடியதாக உள்ளன. சர்வதேச அளவில் எண்ணெய், யூரியா ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரால், சர்வதேச சந்தை நேரடியாக பாதிக்கப்பட்டு விலையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த கடினமான சூழ்நிலையிலும் இந்திய அரசின் வெளியுறவு முயற்சிகளால், நமக்கு தங்கு தடையின்றி எண்ணெய் மற்றும் யூரியா கிடைத்து வருகிறது.

சமீபகால தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்தியா எண்ணெய் வாங்கும் விதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இந்தியாவுக்கு அதிக எண்ணெய் வழங்கும் நாடாக ரஷ்யா மாறி உள்ளது. போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயில் 2 சதவீதம் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் தற்போது 20 சதவீத கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்தே பெறப்படுகிறது. சர்வதேச பிரச்சனைகளுக்கு நடுவே இந்தியாவின் சீரிய வெளியுலக கொள்கைகளால், தொடர்ந்து எண்ணெய் சப்ளை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியாவின் இறக்குமதி யுக்திகளே ரஷ்யாவில் இருந்து அதிகபடியான எண்ணெய் கிடைக்க காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதே போல உரத்தை இறக்குமதி செய்வது இந்திய விவசாயத்தை பாதுகாக்க மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனையும் சிறந்த யுக்திகளால் தடைப்படாமல் இருக்க இந்திய அரசு வழிவகை செய்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் உடன் நல்லுறவை பேணி காப்பதன் மூலம் மோடி தலைமையிலான அரசு இதனை செய்து காட்டி உள்ளது.
சர்வதேச அளவில் போரால் விநியோக சங்கிலி சிக்கலை சந்தித்தாலும்,
வெளியுறவு துறையினால் எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக இந்தியாவுக்கு யூரியா தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சர்வதேச அளவில் விலையேற்றம் ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க அரணாக மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது மானிய திட்டங்களை விரிவுப்படுத்தியதாகும். பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் டீசல் விலை நிலையாக இருக்க, எண்ணெய்க்கு வழங்கிய மானியமும், உர விலையை கட்டுப்படுத்த யூரியாவுக்கு வழங்கப்பட்ட மானியமும் மிகப்பெரிய பங்காற்றின. குறிப்பாக கடந்த ஆண்டு யூரியாவுக்கு வழங்கப்படும் மானியம் இரட்டிப்பாக்கப்பட்டது. இது கடினமான காலங்களிலும் விவசாயத்தை பாதுகாக்க மோடி அரசு உறுதியுடன் இருப்பதை வெளிகாட்டும் ஒன்றாக உள்ளது.

தொடர் மானியங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருந்தாலும், அதனால் அரசுக்கு பல சவால்கள் வந்தன. மானியம் வழங்குவதற்கான நிதியை மற்ற துறைகைளில் இருந்தே அரசு எடுக்க வேண்டி இருந்தது. குறிப்பாக வேலை வாய்ப்பு உருவாக்குவதல், கட்டமைப்பு வளர்ச்சி, நலத்திட்டங்களுக்கான நிதியை வைத்தே அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த நிதி மாற்றத்தால், தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

உலக நாடுகளுடன் சிறப்பான வெளியுறவு கொள்கை வைத்துள்ளதால் இந்தியாவுக்கு எந்த தங்குதடையுமின்றி எண்ணெய் மற்றும் யூரியா கிடைத்து வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாடுகளுடனும் நல்ல உறவை பேணி காப்பதாலேயே விநியோக சங்கிலி பாதிக்கப்படாமல் இந்தியாவால் சாமர்த்தியமாக சமாளிக்க முடிந்துள்ளது.

இந்த தற்காலிக நடவடிக்கைகள் நீண்ட கால பயன்களை வழங்கும் வகையிலும் மோடி அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடினமான நாட்களில் மற்ற நாடுகளை எதிர்பார்க்காமல் தற்சார்புடன் இருப்பதை நோக்கி தற்போது இந்தியாவின் கவனம் திரும்பி உள்ளது. இந்த திட்டத்தினால் நெருக்கடியான காலங்களில் மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படாது.