கொலை செய்யப்பட்ட 3 மணி நேரத்திற்குள் 6 கொலையாளிகளையும் பிடித்த போலீஸ்..!

சோழவரம் : ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது தீரன் சின்னமலை தெரு விஜிபி மேடு ஆத்தூர் சென்னை பகுதியில் காலை 11 மணி அளவில் தனுஷ் வயது 22. தகப்பனார் பெயர் விஜி என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு  அவரது நண்பர் சீனு தகப்பனார் பெயர் கோபி கத்தியால் தாக்கி விட்டும் தப்பிச் சென்ற குற்றவாளிகள் சம்பந்தமாக இறந்து போன தனுஷின் அண்ணன் வினோத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா குமார் மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பந்தமாக அதிரடி விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபரும் இவரது அண்ணன் வினோத் என்பவரும் கடந்த வாரம் விஜிபி மேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரில் வந்த லாரி உ ரசியதால் இருசக்கர வாகனம் சேதம் அடைந்ததாகவும் இதில் வினோத்திற்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது. கோபமடைந்த தனுஷ் மற்றும் வினோத் லாரியை சேதப்படுத்தியதாகவும் அப்போது அங்கு வந்த லாரி உரிமையாளர் குமார் சேதம் அடைந்த இருசக்கர வாகனத்தை சரி செய்து தருவதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வண்டியை சரி செய்து கொடுக்காததால் தொலைபேசி மூலம் வாகனத்தை சரி செய்து தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கோபமடைந்த குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து தனுஷ் என்பவரை கொலை செய்தும் அவரது நண்பர் சீனு தகப்பனார் பெயர் கோபி என்பவர் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்ற குற்றவாளிகள் 1.குமார் தகப்பனார் பெயர் ரமேஷ் பெரியார் நகர் விஜிபி மேடு ஆத்தூர்2. கார்த்திக் வயது 26. தகப்பனார் பெயர் வேதாச்சலம் மூவலூர் அம்மையார் தெரு ஆத்தூர் 3. மணிகண்டன் வயது 34. தகப்பனார் பெயர் சீனிவாசன் ஜெயலலிதா தெரு ஆத்தூர்.4.ஐயப்பன் வயது 30. தகப்பனார் பெயர் ஜெயராமன் காமராஜர் தெரு விஜிபி மேடு ஆத்தூர்.5. சந்தோஷ் வயது 18. தகப்பனார் பெயர் ரமேஷ் பெருமாள் கோவில் தெரு பண்ணீர்வாக்கம் சோழவரம்.6. ராஜா என்கிற மோகன் குமார் வயது 27. தகப்பனார் பெயர் முரளி பெரியார் நகர். நாரணம்பேடு சோழவரம் ஆகிய ஆறு பேரையும் கொலை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்..