சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு – கிராம மக்கள் அச்சம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – வெள்ளி பாளையம் செல்லும் ரோட்டில் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட சென்னாமலை காடு பகுதி உள்ளது .கடந்த சில தினங்களாக சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் சென்னா மலை காடு வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. சென்னா மலை காடு வளர்ப்பு பகுதியில் அடிவாரப் பகுதியையொட்டி அறிவொளி நகர், வெள்ளிப்பாளையம், கரட்டுமேடு மோத்திபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காவலுக்கு வளர்கப்படும் நாய்களையும் மற்றும் ஆடுகளையும் இழுத்துச் சென்று கொன்று விடுகிறது. துளசி அம்மாள் என்பவர் வளர்த்து வந்த கன்று குட்டியை சிறுத்தைகள் தாக்கியதில் அதன் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.  அந்த பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைகளை குண்டு வைத்து விரைவில் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..