கோவையில் அரசு மருத்துவமனை யில் பிறந்த குழந்தைகளுக்கு, தேமுதிக கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் சென்று
விஜயகாந்த் உருவம் பதித்த தங்க மோதிரம் அணிந்து மகிழ்ந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்
, மாவட்டத்தில் மாலையில் தேமுதிக சார்பில் 20வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கோவை வந்த தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 20 குழந்தைகளுக்கு கோவை மாவட்ட தேமுதிக சார்பில் தங்க மோதிரங்கள் அணிவித்தார்கள்,
தொடர்ந்து குழந்தைகளின் தாயார் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிறகு நிருபர்களிடம் பேசிய விஜயபிரபாகரன்
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 20 வருடங்கள் ஆகிறது. இன்று 20வது ஆண்டு தொடக்க விழா என்று தலைவர் விஜயகாந்த் இல்லாத நிலையில் அவரது வழியில் தொடக்க நாளில் தேமுதிகவினர் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை தங்கள் சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளனர். அதை குழந்தைகளுக்கு அணிவித்து மகிழ்ந்தேன். இன்று பிறந்த குழந்தைகள் அனைவரையும் தலைவர் விஜயகாந்த் உருவமாகவே பார்க்கிறேன். அதே போல மாலையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம். என்றார் இதனிடையே கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய பிரபாகரன் இது குறித்து இன்று மாலை நிகழ்ச்சியில் பேசுகிறேன் என கூறிவிட்டுச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் சிங்கை சந்துரு, மாவட்ட அவைத் தலைவர் பொன்ராஜ், பொருளாளர் ராகவ லிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் முருகராஜ், மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.