கோவை : ஈரோடு மாவட்டம் ,கோபியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி ( வயது 45 ) இவர்கள் திருப்பூர், மங்லத்தை அடுத்த பூமலூர் பகுதியில் தங்கி அங்குள்ள வாடகை நிலத்தில் மாட்டுப்பண்ணை அமைத்து பசுமாடுகள், காளை மாடுகள் வளர்த்து வந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் சாந்தி வழக்கம் போல தங்களது பண்ணையில் பால் கறக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு காளை மாடு மிரண்டு சாந்தியை பலமாக முட்டி தூக்கி வீசியது . இதில் மாட்டின் கொம்பு குத்தியதில் வயறு உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது . சாந்தி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பண்ணையில் வளர்த்த மாடு மூட்டி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
பண்ணையில் வளர்த்த மாடு முட்டி பெண் பரிதாப பலி..
