விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல்… நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!

விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் களில் அதிக கட்டண கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. விடுமுறை நாட்களில் சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் அரசின் அனுமதி இன்றி தனியார் பஸ் உரிமையாளர்களால் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார்களை வாசித்தும் இன்று வரை கட்டணம் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு இதை பற்றி கூறும் பொழுது…
தமிழகம் முழுவதும் தற்போது ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. போதிய ரயில்கள் இல்லாத காரணத்தினால் பெரும்பாலானவர்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை விரும்புகின்றனர் . தமிழக முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுலா பேருந்து என்று அடிப்படையில் இந்த ஆம்னி பேருந்துகளை இயக்கப்பட்டு வருகின்றன . சில ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக கொரோனோ பின்பு தங்கள் இஷ்டம் போல கட்டணங்களை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். குறிப்பாக படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளில் தரை தள படுக்கைக்கு ஒரு கட்டணமும் மேல் படுக்கைக்கு ஒரு கட்டணம் என இரு மாதிரியான கூடுதல் கட்டணங்கள் வசூலித்து வருகிறார்கள் மேலும் ஆணி பேருந்துகளில் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்வதால் அதனை விரும்பி பொது மக்கள் பயணம் செய்கின்றனர் 2 கிலோமீட்டர் தாண்டியதும் வண்ண விளக்குல அணைக்க போட்டு சாதாரண பேருந்துகள் போலவே சென்று வருவதை கவனிக்க தவறுகின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து தங்கள் ஊருக்கு செல்லும் நிலை உள்ளது மேலும் விடுமுறை நாட்களில் இஷ்டம் போல விமான கட்டணத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து வசூலித்து வருகிறார்கள் ஆனால் தமிழக அரசு ஒவ்வொரு பேருந்து இருக்கைக்கான வரி மட்டுமே வசூலித்து வருகிறது விடுமுறை நாட்களுக்கு சிறப்பு தினங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக வரி வசூலிப்பதில்லை . ஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மட்டும் தங்கள் இஷ்டத்துக்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிக்கும் முயற்சியாக வசூலித்து வருகிறார்கள் . இது தொடர்பாக தமிழக அரசு ஒவ்வொரு முறையும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கணும்  . ஆனால் சில குறிப்பிட்ட பேருந்துகள் மீது மட்டும் ஆய்வு செய்து குறைந்த அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமத்தை ரத்து செய்வதில்லை இது வெறும் கண் துடைப்பு இருப்பதாக பயணிகள் பொதுமக்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆம்னி பேருந்து சங்கமும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடைய சிரமத்தை கண்டு கொள்வதில்லை .ஆகவே தமிழக அரசு ஒரே சீரான கட்டணத்தை நியமிக்கும் வகையில் ஒரு குழு அமைத்து அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது பொதுமக்கள் நலன் கருதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு தெரிவித்தார்..