கோவை பொது வழிபாதையை மறித்து ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் மனு – வட்டாச்சியர் அகற்ற உத்தரவிட்டும் மறுப்பு..!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை வழிமறித்து கற்களை கொட்டி அதிகாரம் செய்த தனி நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், வட்டாச்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுயிட்டும் கற்களை எடுக்க மறுத்து அதிகாரம் செய்தும் மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். இதில் அவர்கள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம்மும் தாசில்தாரிடமும் மற்றும் பேரூராட்சி அலுவலரிடமும் பலமுறை தொடர்ந்து புகார் கொடுத்தோம். அதன்படி எங்கள் கோரிக்கை ஏற்று தாசில்தார் நேரில் வந்து ஆய்வு செய்து எங்கள் வழி பாதையை வழிமறித்து கொட்டிய கற்களை அகற்ற கடந்த செப்டம்பர் 13.ம்தேதி உத்தரவிட்டுள்ளார்..

இதில் தாசில்தார் உத்தரவுபடி நாங்கள் எல்லோரும் வருவாய் ஆய்வாளர் வருவார் நடவடிக்கை எடுப்பார் என்று காத்து இருந்தோம். அங்கே இடத்திற்கு வரவில்லை நாங்க வருவாய் ஆய்வாளரை தொடர்பு கொள்ளும்போது நான்கு நாட்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி விட்டார் எனவே எங்களின் சாலையில் உள்ள கற்களை அகற்ற உடனடியாக உத்தரவிட வேண்டுமென்றும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தாக கூறினார்கள். ஓருதலை பட்சமாக செயல்பட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு நாங்கள் அனைவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை செய்தனர்..