சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேஸில் 14 கிலோ கஞ்சா சிக்கியது..!

சென்னை : சமீப காலமாக சென்னை சென்ட்ரல் எழும்பூர் தாம்பரம் ரயில் நிலையங்களில் வரலாறு காணாத போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் தமிழக ரயில்வே காவல்துறையினர் தூங்காமல் ஓய்வு எடுக்காமல் ரவுண்டு கட்டி சுற்றி வருகின்றனர். எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் சென்ட்ரல் ரயில் நிலைய போலிஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளிகள் போய் உள்ளனர். இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலைய 11 வது பிளாட்பார்மில் தன்பாத் அலப்பி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி முதல் நிலை காவலர் வேலவன் காவலர் வெங்கடேசன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிளாட்பார்மில் ஒரு சூட்கேஸில் 14 கிலோ கஞ்சா இருப்பதை  கண்டறிந்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வழக்கு பதிவு செய்து கிடுக்கிபிடி விசாரணை செய்தனர். இந்த கஞ்சா யாருடையதாக இருக்கும் என ஆராய்ந்து வருகின்றனர்..