கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளிடம் பிடிபட்ட தங்க நகைகளை மீட்டு தருவதாக கூறி ரூ.9.50 லட்சம் மோசடி..!

கோவை செப்டம்பர் 20ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 37) இவர் மலேசியாவில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ரூ30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி தனது தங்கை உமால் ரஜினா விடம் கொடுத்து அனுப்பினார் . கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யும் போதுஅந்த நகைகளை கைப்பற்றினார்கள். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் காளப்பட்டியைச் சேர்ந்த கே பி . பாலகிருஷ்ணன் என்பவர்அப்துல் ரகுமானின் தங்கையிடம் சுங்க இலாகாவினரிடம் சிக்கிய நகைகளை மீட்டுத் தருவதாக கூறி ரூ.9லட்சத்து 50 ஆயிரம் வாங்கினாராம்.நகைகளை மீட்டுக் கொடுக்கவில்லை. ஏமாற்றிவிட்டார் இது குறித்து அப்துல் ரகுமான் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்காளப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கே.பி- பாலகிருஷ்ணன்என்பவர் மீதுமோசடி உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.